Featured Post

how much loan does India need to pay to world bank

AAAD / Debt. I RTI I 20 1 s- 16 Goverment of India Ministry Of Finance Department Of Economic Affairs Aid accounts & Audit Division Sth...

Compassionate Post

திருமணம் ஆகியிருந்தாலும் மரணமடைந்த அரசு ஊழியரின் மகளுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலையை 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தந்தை மரணம்ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த கயல்விழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘அரசு பணியில் இருந்த என் தந்தை மரணமடைந்தார். இதையடுத்து அவரது ஒரே மகளான எனக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், எனக்கு திருமணமாகிவிட்டது என்று கூறி வேலை வழங்க தமிழக அரசு மறுத்துவிட்டது’ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ‘மனுதாரர் கயல்விழிக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும்’ என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
வாரிசு வேலை
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஈரோடு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, அந்தியூர் தொடக்கக் கல்வி உதவி அதிகாரி ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–வாரிசு வேலை கேட்டு விண்ணப்பம் செய்தவர் திருமணம் ஆனவர் என்றால், அவரது குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்கள், அவருக்கு வேலை வழங்க ஆட்சேபனை இல்லை என்று தடையில்லா சான்றிதழ் வழங்கும்பட்சத்தில் அவருக்கு வேலை வழங்கலாம் என்று தமிழக அரசின் அரசாணை உள்ளது. மேலும், இதுபோன்ற வழக்கில் ஏற்கனவே ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சும் தீர்ப்பு அளித்துள்ளது.வழங்க வேண்டும்எனவே, வேலை கிடைத்த பின்னர் குடும்ப உறுப்பினர்களை பராமரித்துக்கொள்வோம் என்று கயல்விழியும், அவரது கணவரும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். கயல்விழிக்குவாரிசு வேலை வழங்குவதற்கு தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று அவர்களது குடும்பஉறுப்பினர் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். இதன் அடிப்படையில், அவருக்கு4 வாரத்துக்குள் ஈரோடு மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி வேலை வழங்கி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.