Featured Post

how much loan does India need to pay to world bank

AAAD / Debt. I RTI I 20 1 s- 16 Goverment of India Ministry Of Finance Department Of Economic Affairs Aid accounts & Audit Division Sth...

complaint blog links

quarters complaint

மதிப்பிற்குரிய ஐயாஃ அம்மா :
    நாங்கள் மேலூர் ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வருகிறோம். இங்கு பலவருடங்கள் ஆக தெருவிளக்கு இல்லாமல் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். இரவு நேரங்களில் தெருவிளக்கு இல்லாததால் சுற்றுப்புற மரபுதர்களிலிருந்து பாம்புகள் பூராண்கள் வருவது தெரியாமல் மிதித்து பாதிப்புக்குள்ளாக நேரிடுகிறது. மேலும் அனைத்து வீடுகளிலும் உள்ள சிறு குழந்தைகள் மாலை நேரத்தில் வெளியே விளையாட முடியாமல் பயத்தில் தவித்து வருகின்றனர். வேலைக்கு ஃ வெளியூர்களுக்கு சென்று தாமதமாக வர நேரும் போது இரவில் வெளிச்சம் இல்லாதததால் நாங்கள் பாம்புகளை மதிக்காமல் செல்ல பயத்துடன் போய்வர வேண்டியுள்ளதால் தயவு கூர்ந்து குடியிருப்பு வாயிலில் ஒரு தெருவிளக்கு அமைத்து தரும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலூர் ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வரும் நாங்கள் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல சாக்கடை இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறோம். வீட்டின் பின்புறங்களில் மண்டிகிடக்கும் செடிமுட்புதர்களில் மழை தண்ணீர்ஃ கழிவுநீர் தேங்கி செல்ல வழியின்றி கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குடியிருப்பில் வசித்து வரும் அனைவரும் பெரிதும் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தற்போது பரவிவரும் காய்ச்சல்களை மனதில் கொண்டு தயவு கூர்ந்து வீடுகளின் பின்புறம் கழிவுநீர்;; செல்ல பொதுவான சாக்கடை வாய்கால் மற்றும் குப்பை தொட்டிகள் கட்டித்தரும்படி மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
                    நன்றி